சனிக்கிழமை, சர்வதாரி ஆண்டு, ஆவணி 7 (23-8-08), பிறை: தேய்பிறை, திதி : சப்தமி இரவு 6.25 மணி வரை; பிறகு அஷ்டமி, நட்சத்திரம்: பரணி காலை 11.26 மணி வரை; பிறகு கிருத்திகை.
யோகம் : சித்தயோகம், ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, எமகண்டம்: பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, சூலம்: கிழக்கு, நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை. மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
இன்று கோகுலாஷ்டமி. கிருஷ்ணனுக்கு சிறப்பான தினம். அவருக்கு பிடித்த வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களைப் படைத்து வழிபடும் நாள்.
கிருத்திகை விரதம், வல்லக்கோட்டை சுப்ரமணியர் சந்தனகாப்பு, தாயார் குங்குமக் காப்பு, தென்னாங்கூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் ஸ்ரீகோகுலாஷ்டமி விழா.