மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் வர, கூடவே, பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும், ரிஷப லக்னமும் சேர்ந்து வரும் நன்னாளே மகாமகமாகும்.
இது குறிஞ்சி மலர் போல 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும்.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம், ரிஷப லக்னம் ஒரே நாளில் சேர்ந்து வருவது மாசி மகமாகும். சில நேரங்களில் அந்த நாளில் பவுர்ணமியும் சேர்ந்து வரும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் கடந்த 2004ஆம் ஆண்டு வந்தது. அன்று கும்பகோணத்தில் கொண்டாடப்பட்டது. அடுத்த மகாமகம் வரும் 2016ஆம் ஆண்டுதான் வருகிறது.