வரும் வார நாட்களின் சிறப்புகளை பார்க்கலாம்.
ஜூலை, 25, சனிக்கிழமை - ஆடிப்பூரம், நாக சதுர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரங்கமன்னார் பெருந்தேரில் பவனி. மதுரை மீனாட்சி வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் ரத உற்சவம். கீழ்நோக்கு நாள்.
ஜூலை, 26, ஞாயிறு - மேல்நோக்கு நாள், கருடபஞ்சமி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தபசு காட்சி. சங்கரன்கோவில்
கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. நயினார்கோவில் சௌந்தர நாயகியம்மன் இரவு திருக்கல்யாணம்.
ஜூலை, 27, திங்கள் - சஷ்டி விரதம். சமநோக்கு நாள், வாஸ்து செய்ய நன்று. ராமேஸ்வரம், திருவாடானை ஆகிய தலங்களில் திருக்கல்யாணம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி ரிஷப சேவை.
ஜூலை, 28, செவ்வாய் - சம நோக்கு நாள். திருமாலிருஞ்சோலை வடமதுரை உற்சவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி கிளி வாகனத்தில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகன உலா.
ஜூலை, 29, புதன் - சமேநாக்கு நாள், கருட ஜெயந்தி. மதுரை மீனாட்சி புஷ்பப் பல்லக்கில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகன உலா.
ஜூலை, 30, வியாழன் - கீழ்நோக்கு நாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமாவதாரக் காட்சி; அனுமார் வாகனத்தில் திருவீதியுலா. மதுரை மீனாட்சியம்மன் தங்கக் குதிரையில் பவனி. சங்கரன் கோயில் ஸ்ரீகோமதியம்மன் கனக தண்டியில் பவனி வரும் காட்சி.
ஜூலை, 31, வெள்ளி - வரலட்சுமி விரதம். ராமேஸ்வரம் சுவாமி&அம்பாள் பட்டினப் பிரவேசம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் இரவு கருட வாகனத்தில் திருவீதியுலா. சென்னை - பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா காப்புக் கட்டுதல்.