வரும் வாரத்தில் வரும் விசேஷங்கள் பற்றியும் அந்த நாட்களில் கோயில்களில் செய்யப்படும் சிறப்பு பூஜைகள் பற்றியும் பார்க்கலாம்.
டிசம்பர் 27ஆம் தேதி சனி அமாவாசை, அனுமன் ஜெயந்தி. குச்சனூர் சனி பகவான் சிறப்பு ஆராதனை. தஞ்சை புன்னைநல்லூர் ராமர் சந்நதியில் ஜெயவீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். அனுமன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.
டிசம்பர் 29ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பகற்பத்து உற்சவம் ஆரம்பம்.
டிசம்பர் 31 புதன்கிழமை திருவோண விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரங்க மன்னார் கோபால விலாசம் எழுந்தருளல். கும்பகோணம் சாரங்கபாணி பகற்பத்து உற்சவம்.
ஜனவரி 1 வியாழக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு. அனைத்து கோயில், தேவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள். சதுர்த்தி விரதம்.