இந்த வாரத்தில் வரும் நாட்களின் சிறப்புகள் மற்றும் விசேஷங்கள் பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள
ஜூலை 07 செவ்வாய் - இன்று பெளர்ணமி. திருவண்ணாமலை கிரிவலம். காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி ரதம். சுவாமி மலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். கீழ் நோக்கு நாள்.
ஜூலை 08 புதன் - மேல்நோக்கு நாள், திருநெல்வேலி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வருசாபிஷேகம். திருவண்ணாமலை, திருவையாறு தலங்களில் சிவபெருமான் அயன உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சகசரகலாபிஷேகம். இன்று தென்னை, மா, பலா நடுவதற்கு ஏற்ற நாள்.
ஜூலை 09 வியாழன் - மேல்நோக்கு நாள், முகூர்த்த நாள். சிரவண விரதம், நாங்குநேரி உலகம்மன் கோவில் வருசாபிஷேகம். உப்பிலியப்பர் கோவில் சீனிவாச பெருமாள் அகன்ற தீப காட்சி.
ஜூலை 10 வெள்ளி - மேல் நோக்கு நாள், சுபமூகூர்த்த தினம். திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சலில் சேவை.
ஜூலை 11 சனி - மேல் நோக்கு நாள், இன்று சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
ஜூலை 12 ஞாயிறு - மேல் நோக்கு நாள், சூரிய வழிபாடு நன்று. கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அனுமாருக்கு திருமஞ்சன சேவை.
ஜூலை 13 திங்கள் - கீழ் நோக்கு நாள், கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை. இன்று கிழங்கு வகைகள் பயிரிட ஏற்ற நாள்.