இந்த வாரத்தில் வரும் நாட்களின் சிறப்புகள் மற்றும் விசேஷங்கள் பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள
ஜூன் 24 புதன் - சமநோக்கு நாள், முகூர்த்த நாள், சிதம்பரம் சிவபெருமான் விருசப சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி. ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம்,
ஜூன் 25 வியாழன் - மேல்நோக்கு நாள், முகூர்த்த நாள் (காலை 11 - 12, மாலை 5-6 மணி), திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வருசாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரணி நாற்காலியில் வீதி உலா. ராமநாதபுரம் கோதண்டராம சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
ஜூன் 26 வெள்ளி - சதுர்த்திவிரதம். கீழ் நோக்கு நாள், சமீகெளரி விரதம். திருக்கோளக்குடி, கானாடுகாத்தான், கண்டதேவி சிவ தலங்களில் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி அனுமார் வாகனத்தில் புறப்பாடு.
ஜூன் 27 சனி - கீழ்நோக்கு நாள், சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடணராக காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனத்தில் பவனி.
ஜூன் 28 ஞாயிறு - கீழ்நோக்கு நாள், சஷ்டி விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம். ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் யானை வாகனத்தில் பவனி.
ஜூன் 29 திங்கள் - மேல்நோக்கு நாள், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம், சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன உற்சவம், ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம், சாத்தூர் வெங்கடேச பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.