Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேடைக்கப்பால் ஹசாரே என்ன செய்கிறார்?

மேடைக்கப்பால் ஹசாரே என்ன செய்கிறார்?
, திங்கள், 22 ஆகஸ்ட் 2011 (18:47 IST)
PTI Photo
FILE
ஊழலை ஒழிக்கும் ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காந்தியவாதி அண்ணா ஹசாரே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் ஊழலுக்கு எதிராககு குமுறிக்கொண்டிருக்கும் மிஸ்டர் பொதுஜனத்தின் கூட்டுக் கோபத்தை வெளிப்படுத்தி மத்திய அரசை கிடுகிடுக்க வைத்துள்ளது.

இந்த கிடுகிடு போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஹசாரே, உண்ணாவிரத மேடையில் அமரும் நேரம் தவிர, மற்ற நேரத்தில் என்ன செய்கிறார் என்பது குறித்து அவரது ஆதரவாளரும், நம்பிக்கைக்கு உரிய உதவியாளருமான சுரேஷ் பதாரே கூறும் தகவல் இதோ:

ராம்லீலா மைதானத்தில் தினமும் காலையில் மேடையில் தோன்றுவதற்கு முன்பு அண்ணா ஹசாரே மேடையின் பின்புறம் 10x10 அடி அறையில் அமர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக தியானம் குறித்து எழுதுகிறார்.

ஹசாரே தனது வழக்கமான யோகா பயிற்சியை உண்ணாவிரதம் காரணமாக தவிர்த்து விட்டார். எனினும் எழுதும் பணியில் அவர் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.

மேடையின் பின்புறம் மறைவாக அமைக்கப்பட்டுள்ள அறையில் காலை 6.30 மணிக்கு ஹசாரே எழுகிறார். தயாராவதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்.தினமும் முகச்சவரம் செய்துகொள்கிறார்.

அது இராணுவத்தில் இருந்தபோது அவருக்கு பழக்கமாகிவிட்டது என குறிப்பிடும் பதாரே, 10 ஆண்டுகளாக ஹசாரேவுடன் இருக்கிறார்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து எழுதத் தொடங்குவார்.சிறிய விஷயங்கள் குறித்தே அவர் எழுதுகிறார். மனிதாபிமானம், மனித உரிமைகள்... என பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் எழுதியுள்ளார்.

திகார் சிறையில் இருந்தபோதும் அவர் எழுதினார்.எனினும் அங்கே நாளிதழ் படிப்பதற்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும்கூட நேரத்தை செலவிட்டார். ஆனால் இங்கு எழுத மட்டுமே செய்கிறார்.

webdunia
FILE
கிராமங்களில் ஹசாரே சில சமயம் நீண்ட நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்.அவரது அறைக்கதவை தட்டுவதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது. யாராவது உணவு கொண்டுவந்தால்கூட அதை வெளியே வைத்துவிட்டுச் சென்றுவிடுவர். அவரைத் தொந்தரவு செய்ய யாருக்கும் தைரியம் இல்லை.

ராம்லீலா மைதானத்தின் மேடையில் டாக்டர்கள் தினமும் 3 மணி நேரம் அவரை பரிசோதிக்கின்றனர். இரவு 10 மணியளவில் மேடைக்குப் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றுவிடுகிறார்.

உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் தூங்குவதை ஹசாரே விரும்புவார் என பதாரே தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஹசாரேயின் 10 உண்ணாவிரதப் போராட்டங்களில் அவருடன் சுரேஷ் பதாரேவும் உடன் இருந்துள்ளார்.

தினமும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகள் தவிர 24 மணி நேர ஆம்புலன்ஸ் ஒன்றும் ஹசாரேவின் இரவுநேர அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.

ஹசாரேவை பரிசோதிக்கும் மருத்துவர்களில் ஒருவரான பல்ராம் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹசாரேவின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு உள்ளிட்ட அனைத்தும் சீராக உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு கால்பந்து மைதானத்தைவிட பெரிதாக இருக்கும் இந்த மைதானத்தில், பாதுகாப்பு பணியில் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் போலீசார் தவிர,ஹசாரே ஆதரவாளர்கள் சுமார் 300 முதல் 400 பேர் வரை மைதானத்தை சுற்றி வருகின்றனர்.

ஹசாரேவை அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைத் தவிர வேறு யாரும் சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு ஆவணத்தையும் முழுமையாக ஆராயாமல் ஹசாரே கையெழுத்திட மாட்டார். 100 முறையாவது அதை பரிசோதித்து 50 மாற்றங்களையாவது செய்யாமல் விடமாட்டார். அவரிடம் யாரும் எதையும் திணிக்க முடியாது.அவர் ஒரு கச்சிதமான மனிதர் என்கிறார் பதாரே.

Share this Story:

Follow Webdunia tamil