Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

Advertiesment
நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (13:01 IST)
கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் கருத்தில் இணைவதுதானே கூட்டணி தர்மம்(?!) குறைந்தது நமது அரசியல்வாதிகள் அப்படித்தானே விளக்கம் அளிக்கிறார்கள்!
 
விஜய்காந்த் கட்சிக்கும் அன்புமணி ராம்தாஸின் கட்சிக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் இன்று நரேந்திர மோடி, நரேந்திர மோடி என்று பிரச்சாரத்திற்கு பிரச்சாரம் வார்த்தைக்கு வார்த்தை மந்திர உச்சாடணம் செய்து வருகின்றனர்.
 
கடலூரில் விஜய்காந்த் பேசியதும், அருகே சிதம்பரத்தில் அன்பு மணி பேசியதும் ஏறக்குறைய ஒன்றுதான்.
 
இருவருமே நமோ நமோதான், அதேபோல் இருவருமே அதிமுக, திமுக மீது கடும் விமர்சனம்.

ஜெயங்கொண்டத்தில் பேசிய அன்புமணி "மோடி எனது சிறந்த நண்பர்' என்றார். நண்பர் என்றால் மக்கள் ஓட்டு போடவேண்டுமா என்ன? என்ற கேள்வியெல்லாம் அவருக்கு ஏற்படவேயில்லை. 'சுதா மணிரத்னத்திற்கு வாக்களித்தால் மோடி பிரதமராவது கைகூடும்' என்றும் அன்பு மணி பேசினார். மோடி பிரதமரானால் அவரிடம் பேசி தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத் தருவாராம் அன்புமணி.
 
கடலூரில் பேசிய விஜய்காந்த், "மோடி வந்தால் தமிழகத்தின் நீர் மற்றும் மின்சாரப்பிரச்சனைகள் நீங்கும். குஜ்ராத்தில் மிகை மின் உற்பத்தி தற்போது மோடியின் கீழ் நடந்து வருகிறது. மோடியிடம் பேசி தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டைத் தீர்ப்போம்.
 
45 ஆண்டுகால தமிழக வரலாற்றில் இப்போதுதான் பலமான கூட்டணி அமைந்துள்ளது, என்றார் விஜய்காந்த்.
 
அதேபோல் திமுக, அதிமுக ஒன்றுமே செய்யவில்லை. மக்களுக்காக என்ன செய்து விட்டார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
 
மொத்தத்தில் இருவரும் நமோ நமோவில் இறங்கிவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil