Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசகர்களின் தேவைக்கு ஏற்ப 20 வருட சேவையில் வெப்துனியா!!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (14:41 IST)
வாசகர்களின் தேவைக்கு ஏற்ப 20 வருட சேவையில் வெப்துனியா!!

கடந்த 20 வருட காலமாக இணையதளத்தில் நாங்கள் வழங்கும் செய்திகளின் மூலமாக சாமானிய மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். முதலில் இணையதளம் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் தளம், தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாக ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற சமூக வளைதளங்களில் பரவி மக்களை சென்றடைந்தது. தற்போது வளர்ந்துள்ள சோசியல் மீடியா அப்ளிகேசன்கள் மூலமாக மக்களிடம் உடனடியாக செய்திகளை கொண்டு சேர்க்கிறோம்.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நிகராக தேர்தல், இயற்கை பேரிடர் மற்றும் விழா காலங்கள் ஆகிய நாட்களில் ஓய்வின்றி தொடர்ந்து மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் வழங்குவது வெப்துனியாவின் சிறப்பு. அரசியல் நிகழ்வுகள், அரசு அறிக்கைகள் அதில் மக்கள் பயன்பெறுமாறு இடம்பெற்றுள்ள திட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான செய்தியாக வெப்துனியா வெளியிடுகிறது.

செய்திகளை வழங்கும் அதேசமயம் மக்களின் பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் அளித்து சினிமா செய்திகள், திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், திரைப்பிரபலங்களின் நேர்க்காணல்கள் ஆகியவற்றையும் வெப்துனியா செய்தியாகவும், யூட்யூப் வீடியோவாகவும் மக்களுக்கு வழங்கி வருகிறது.

இதனால் தொடர்ந்து வெப்துனியாவின் செய்திகளை படிக்கவும், அதற்கு கருத்து தெரிவிக்கவும் நிறைய நேயர்கள் உருவானார்கள். தமிழக செய்திகள், உலக செய்திகள் மட்டுமல்லாது தொழில்நுட்பம், வணிகம், ஆன்மீகம், ஆரோக்கியம், சினிமா மற்றும் விளையாட்டு போன்ற மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதனால் கடந்த 20 வருடங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெப்துனியாவை பல்லாயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து பயன் பெற்று வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்களின் ஜாதக பலன்கள், ஆன்மீக தகவல்கள், பரிகாரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக வெப்துனியாவுக்கென்றே பிரத்யேகமான பார்வையாளர்கள் உருவானார்கள். மேலும், ஆரோக்கியம், மருத்துவம், அழகு குறிப்புகள் போன்றவற்றை நேரடி ஒளிபரப்பு மூலம் கொண்டு சேர்த்ததன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றனர். இதுகுறித்து சந்தேகங்களையும் நேரடியாக தளத்தில் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்கிறார்கள்.

இருபது ஆண்டு கடந்தும் மக்கள் மனதிலும், மொபைலிலும் வலம் வரும் வெப்துனியா, இனி எதிர்கால தலைமுறைகளுக்கும் ஏற்றவாறு சிறப்பான செய்திகளையும், தகவல்களையும் தொடர்ந்து வழங்கும். இதுநாள் வரை வெப்துனியாவிற்கு ஆதரவளித்து, நல்ல கருத்துகளை கூறி வழிநடத்தி செல்லும் பார்வையாளர்களுக்கு வெப்துனியாவின் மனமார்ந்ந்த நன்றிகள்!

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments