Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வெப்துனியா...

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (23:36 IST)
செப்டம்பர் 23 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு வெப்துனியா துவங்கப்பட்டது. ஹிந்தியில் முதலில் துவங்கப்பட்ட வெப்துனியா உலகில் முதல் முறையாக துவங்கப்பட்ட இணைய போர்ட்டல் ஆகும். சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. பல கிளைகளை கொண்டுள்ளது. மேலும் நல்ல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் வழங்கி வருகிறது.


 


இந்தியாவில் இணையம் 1980-களில் அறிமுகமானாலும், இணையத்தின் அதிகாரப்பூர்வ பயன்பாடு 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிஎஸ்என்எல் கேட்வே சேவையை அறிமுகபடுத்திய போதுதான் துவங்கியது. அந்த காலத்தில் இணையதளங்கள் குறைந்த அளவில் இருந்தாலும் அவை பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே இருந்தன.

ஆனால், ஹிந்தி மொழிக்கு இதனை தகர்த்தெரிய நீண்ட காலம் எடுக்கவில்லை. அதன் பின்னர் இணைய உலகில் இது பெரிய நிலையை அடைந்தது. காலங்கள் கடந்த பின்னர், வெப்துனியா இணைய உலகில் பெரிதளவில் வளர்ந்தது. 18 வருடங்களில் இந்தியாவின் முக்கிய மொழிகளில் இயங்கிவருகிறது.



 


பல இந்தியர்கள் இன்று வெப்துனியாவை தங்களது வழக்கமான இணைய போர்ட்டலாக பயன்படுத்தி வருகின்றனர். பல வெளிநாட்டவர்களுக்கும் வெப்துனியா முதல் தேர்வாக உள்ளது. எங்களது பயணத்தை திரும்பி பார்க்கும் போது பாரம்பரிய வாடிக்கையாளர்களுக்கு இது பல காலங்களாக பயனுள்ளதாக இருந்து வருகிறது.

வெப்துனியா நிறுவனத்தின் சி.ஈ.ஓ திரு. வினய் சஜிலானி ஹிந்தி போர்ட்டலை நிஜ வாழ்க்கைக்கு கொண்டு வந்தார். இன்று வெப்துனியா 8 மொழிகளில் இயங்கிவருகிறது. குறிப்பாக மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் மற்றும் தென் இந்தியாவின் நான்கு திராவிட மொழிகளில் இயங்கி வருகிறது.


 



வெப்துனியா தனது நன்றிகளை பலருக்கு தெரிவிக்கவேண்டி உள்ளது. வீடியோ செய்திகள், இணைய எடிட்டோரியல், சினிமா விமர்சனம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. மொபைல் ஆப் தற்போது எங்களது வாடிக்கையாளர்களுக்கு இணைய ரிப்போட்டர்களாக மாற்றி தங்களது ஐடியாகள், புகைப்படங்கள், வீடியோகளை அனுப்பி இரண்டு வழி உறவுகளை போர்ட்டல் மற்றும் பயனர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

பல மில்லியன் பயனர்கள் வெப்துனியாவை ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸேர் சேட், யு ட்யூப் ஆகிய இணைய பக்கங்களில் பின்பற்றி எங்களது சந்தாதாரர்களாக உள்ளனர். இவை அனைத்தும் நீங்கள் இன்றி சாத்தியமில்லை.  வெப்துனியா இன்று 17 ஆண்டுகள் கடந்து 18-ஆம் ஆண்டில்  அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் இது போன்று பல வருடங்களுக்கு உழைக்க உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments