Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் வன்கொடுமையாளர்களின் புது யுக்தி பெண்களே உஷார்!

Advertiesment
பாலியல் வன்கொடுமையாளர்களின் புது யுக்தி பெண்களே உஷார்!
, சனி, 1 ஏப்ரல் 2017 (12:27 IST)
தொடர்ந்து பெண்களுக்கெதிராக பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முயற்சித்தும் பயன் இல்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணதான் உள்ளது. சமீபத்தில் கூட ஐந்து ஆன்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ்  ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்.

 
அந்த பெண்ணை சோதித்ததில் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது. அவரது இரத்தத்தில் Rohypnol என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து பொருளைதான் தற்போது பலாத்காரத்திற்காக பரவாலப் பயன்படுத்தப்படுகிறது.
 
இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும். அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும்  நினைவுகூற முடியாது.

Rohypnol இந்த மருந்துக்கு தனி சுவையோ, நிறமோ கிடையாது. அதனால் குடிப்பவருக்கு அவரது பானத்தில் கலந்திருப்பதே தெரியாது. இதனை குடிப்பதால் நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறுநாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பர்றுய எந்த ஒரு விஷயமும் அவர்களது நினைவில் இருப்பதில்லை.
 
எனவே பெண்கள் கவனத்துடன் இருப்பதுடன், வேறு அறிமுகமில்லாத நபர்கள் வாங்கி தரும் பொருட்களை சாப்பிடாமல் இருப்பதோடு, அனுமதிக்கவும் வேண்டாம். இதனி அனைவருக்கும் பகிரவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனுடன் மோதல் ; கட்சியில் உயர் பதவி வேண்டும் : கொடி பிடிக்கும் திவகாரன்?