Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ. மரணம் குறித்த ரகசியத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணை: சசிகலா புஷ்பா

Advertiesment
ஜெ. மரணம் குறித்த ரகசியத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணை: சசிகலா புஷ்பா
, திங்கள், 19 டிசம்பர் 2016 (11:20 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

இது குறித்து அந்த மனுவில் கூறியுள்ள சசிகலா புஷ்பா, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்ரூப் காலிங்: பேஸ்புக் நிறுவனம் அறிமுகம்!!