எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: நடிகை ஓவியா ஓப்பன் டாக்!!!

திங்கள், 11 மார்ச் 2019 (12:45 IST)
நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு எந்த ஒரு கட்சிக்கும் பிரச்சாரமோ அல்லது ஆதரவோ தெரிவிக்கப்போவதில்லை என ஓவியா கூறியுள்ளார்.
 
பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது ,  லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து  அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார். 
 
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் பிரச்சாரம் செய்ய நடிகர் நடிகைகளை அணுகி வருகின்றது.
 
இந்நிலையில் நடிகை ஓவியா பேசுகையில் பிரச்சாரம் செய்ய முன்னணி கட்சி நபர்கள் என்னை அணுகினார்கள். நான் மறுத்துவிட்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மதுரையில் தேர்தல் நடத்துவது கஷ்டம்: பின் வாங்கும் போலீஸ்: என்ன காரணம்?