Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாயையும், காதுகளையும், கண்களையும் மூடி கொண்டதா சசிகலாவின் பன்னீர் அரசு?

Advertiesment
வாயையும், காதுகளையும், கண்களையும் மூடி கொண்டதா சசிகலாவின் பன்னீர் அரசு?
, செவ்வாய், 3 ஜனவரி 2017 (11:57 IST)
அடுத்தடுத்து தமிழக அரசியல் நிகழ்வுகள், பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு என்று நம் கவனம் சிதறி, நாம் கவனிக்கத்  தவறிய துன்பவியலான சம்பவம், தண்ணீர் இன்றி பயிர்கள் அழிவதைக் கண்டு இதுவரை இறந்த தமிழக விவசாயிகள் எண்ணிக்கை ஐம்பத்தைத் தாண்டி உள்ளது.



தூத்துக்குடி எட்டையபுரம் படர்ந்தப்புனியைச்  சேர்ந்த விவசாயி பெ சுப்பையா,  சிவகங்கை மானாமதுரையை சேர்ந்த விவசாயி கருப்பையா, நாகப்பட்டினம் ஆழியூர் கடம்பன் வாழ்க்கையை ச்சேர்ந்த விவசாயி சரோஜா மரணங்கள், ஏதோ தினத்தந்தி நாலாம் பக்கம் உள்ள பெட்டிச் செய்திகள் அல்ல. வாடியப் பயிரை கண்டப்பொழுதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் தேசம் விவசாயி மரணங்களை  கண்டு அரசு அலட்டிக் கொள்ளாதது ஏன்?
  
மௌனி சசிகலாவின் பன்னீர் அரசு
 
சசிகலாவின் பன்னீர் அரசு இதில் பெருமைப்படுகிறதா? விவசாயிகள் மரணம் வேதனையான விஷயம் வெட்க்கப்படவேண்டிய விஷயம். சென்னையின் மா மழைக்காக, காவேரிக்காக, ஜல்லிக்கட்டுக்காக, வர்தாவுக்காக திரண்ட மக்கள் எழுச்சி எங்கே போனது? ஒரு அரசு, தனது ராஜ்ஜியத்தின் மூத்த மேன்மை நிறைந்த மக்களை இழந்து வருகிறது என்பதை எண்ணி பார்க்கிறதா இல்லையா?
 
திருமதி சசிகலா நடராஜன் அவர்களே! எது ஜனநாயகததின் மாண்பு? பதவிகள் பெறுவதா? மேடை பேச்சுக்களா? இல்லை பொது செயலர் பதவி பெறுவதா? தன் மக்களை/விவசாயிகளை காப்பதே, அவர்களை கவுரமாக வாழ வைப்பத்திலே ஜனநாயகததின் மாண்பு இருக்கிறது. 
 
விதர்பா மற்றும் தெலுங்கனா விவசாயிகளின் தொடர்ச்சியா இந்த நிலை?. ஆளும் அரசுகள் ஏன் தங்கள் கடமையை செய்ய தயக்கம் காட்டுகின்றனா? பட்டாபிஷேகம் முடிந்த பின்பும் ராணியார் மக்களை பற்றி கவலைப்பட வில்லை என்றால் இதன் பெயர் தான் என்ன? தலைமை செயலகம் என்ன இன்னும் தூக்கிக் கொண்டு இருக்கிறதா? அரசின் ஆலோசகர்கள் திட்டங்களை வகுப்பவர்கள் எங்கே போனார்கள்? பரதேசம் போகவில்லையே? பெரியம்மா சின்னம்மா புராணங்களை இன்னும் எத்துணை நாட்கள் பாடுவீர்கள்? 
 
யுத்தங்களில் வெற்றி வாகை சூடும் மன்னர்கள் களப்பலி இடுவது போல சசி அரசு நூறு விவசாயிகளின் களப்பலி கேட்கிறதா? அக்கா கோட்டைக்கு போய்ட்டான்களா? அக்கா மதியம் என்ன சாப்பாடு செய்யட்டும்? என்றலெல்லாம் இன்னும் நீங்கள் கேட்கும் மனோ நிலையில் இன்னும் இருக்கிறீர்களா? அப்படியே இன்று எத்துணை விவசாயி செத்தான் என கேட்க தெரிந்து கொண்டு எதிர் வினை ஆற்றுங்கள் சசி தேவி. பாவத்தின் சம்பளம் மரணம் என்பது போல தமிழத்தில் விவசாயம் செய்தான் என்பதற்க்காக, வாழ வழி அற்ற அவனுக்கு இந்த புதிய அரசு தரும் புத்தாண்டு பரிசு தான் மரணம் என்று நினைக்கிறீர்களா?

திட்டங்களை வகுங்கள்! விவசாயிகளை சந்தியுங்கள்! திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்! இயற்றலும் ஈட்டலும் மட்டுமே அரசின் கடமை என்று நினைக்கிறீர்களா? காத்தல் என்பதும் அரசின் கடமை தானே சசி மகராணி?
 
* 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுப்படுத்துங்கள் 
* அம்மா உணவங்களை விவசாயிகள் வீடுகளுக்கே எடுத்து செல்லுங்கள் 
* விவசாய கடன்களை ரத்து செய்யுங்கள்
 
விவசாயிகளின் கரம் பற்றுகள்! அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!
அவன் வாழ நாம் வாழ்வோம், இதில் அரசுக்கு மட்டும் அல்ல, சக மனிதனாய் நாம் அனைவரும் குற்றவாளிகளே, மனிதனை சக மனிதன் கருணையுடன் பார்ப்பதும் ஒரு இறை வணக்கமே! இறை தவமே!

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]


webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னையனின் விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்த மர்ம ஆசாமி