Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரலாறு படைத்த கோலி:புதிய சாதனை

வரலாறு படைத்த கோலி:புதிய சாதனை
, வியாழன், 27 ஜூன் 2019 (17:55 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணி மோதிவரும் நிலையில் கிரிக்கெட் வீரர் வீராத் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் மான்சஸ்டர் நகரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் லீக் போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணியும், இந்திய அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் ரோஹித் சர்மா விக்கெட் இழந்த பிறகு விராட் கோலி களமிறங்கினார். பின்பு கோலி பேட்டிங் செய்து 37 ரன்களை குவித்த போது, மிக குறைந்த போட்டிகளில் சர்வதேச அளவில் 20,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் பிரபலமான கிரிக்கெட் வீரர்களான பிரைன் லாராவும் சச்சின் டெண்டுலகரும் 453 இன்னிங்க்ஸில் 20,000 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். அடுத்ததாக  ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ்களில் 20,000 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

தற்போது சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோரின் சாதனைகளை முறியடித்த விராத் கோலி, 417 (131 டெஸ்ட், 224 ஒரு நாள் போட்டி, 62 டி20) இன்னிங்ஸ்களில் 20,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

விராத் கோலி சேர்த்துள்ள 20,000 ரன்களில், 11,087 ரன்கள் ஒரு நாள் போட்டிகளிலும், 6,613 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும், 2,263 ரன்கள் டி20 போட்டிகளிலும் விளையாடி சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியின் சாதனையை முறியடித்த வீரர் : யார் அந்த ரன் மெஷின் ?