Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட் பாலில் ரன் அவுட் ஆன தோனி: ஐசிசி விதிகளை மீறிய அம்பயர்கள்...

நாட் பாலில் ரன் அவுட் ஆன தோனி: ஐசிசி விதிகளை மீறிய அம்பயர்கள்...
, வியாழன், 11 ஜூலை 2019 (12:24 IST)
அம்பயர்களின் கவனக்குறைவால் நாட் பாலில் தோனி ரன் அவுட் ஆகிப்னார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. 
 
நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்த் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்த் அணி 239 ரன்களை எடுத்தது. 240 ரன்கல் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேக்கள் பயங்கரமாக சொதப்பினர். 
 
பின்னர் வந்த பாண்டியாவும், ரிஷப் ப்ந்த்தும் சற்று தாக்குபிடித்தனர். இவர்களும் அவுட் ஆக அடுத்த வந்த தோனி, ஜடேஜா வெளிப்படுத்திய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை கொடுத்தனர். ஆனால், ஜடேஜா அவுட் ஆக தனியாக நின்ற தோனியும் ரன் அவுட் ஆனார். 
webdunia
கடைசியில் மொத்த விக்கெட்டையும் இழந்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. தோனி களத்தில் நின்ற வரை இந்திய ரசிகர்களுக்கு இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. 
 
ஆனால், தோனியின் ரன் அவுட் நேற்றைய பெரும் துயரமாக இருந்தது. ஆனால், தோனி ரன் அவுட் ஆனாது நாட் பாலில் என தற்போது சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவிவருகின்றன. 
webdunia
அதாவது, 3 வது பவர் பிளே ஓவர்களான, 40 - 50 ஓவர்களில் 30 மீட்டர் வட்டத்திற்கு வெளியே, 5 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், தோனி அவுட் ஆன பந்தில் உள்வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்கள் நின்றிருந்துள்ளனர். 
 
ஐசிசி விதியின் படி, அந்த பந்து நாட் பால் என அறிவித்திருந்திருக்க வேண்டும். ஆனால் அம்பயர்கள் இதை கவனிக்காததால் அது ரன் அவுட் ஆகியது என தகவல் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சத் சாதனை !