Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தோனி அவுட்டானது எங்களுக்கு ஒரு லக்”..மகிழ்ச்சியில் நியூஸிலாந்து வீரர்

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (12:03 IST)
நிலையாக விளையாடிக் கொண்டிருந்த தோனியை, ரன் அவுட் செய்தது, நியூஸிலாந்து அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

கடந்த நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி படுதோல்வியை சந்தித்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது. பல போட்டிகளில் அபாரமாக விளையாடிய விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்கு அடுத்ததாக களம் இறங்கிய தோனி, 72 பந்துகளில், 49 ரன்கள் குவித்து  அடுத்த பந்தை எதிர்கொண்டு நின்றார். அந்த பந்தை எதிர்கொண்ட தோனி, ஒரு ரன் எடுத்துவிட்டு, இரண்டாவது ரன்னை எடுக்க முயன்றார்.

இந்நிலையில் தோனி அடித்த பந்தை கைப்பற்றிய மார்ட்டின், சரியான நேரத்தில் ஸ்டம்ப்பை குறிவைத்து பந்தை வீசியதால், தோனி ரன் அவுட் ஆனார்.
இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டு, அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள், வரிசையாக ஆட்டமிழக்க, கடும் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியைச் சேர்ந்த மார்ட்டின் கப்டில், தோனியை ரன் அவுட் ஆக்கியது, நியூஸிலாந்து அணி வெல்வதற்கான திருப்புமுனையை ஏற்படுத்தியது எனவும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் இருந்திருந்தால், இந்நேரம் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றிருக்குமா எனபது நிச்சயமாக கூறியிருக்கமுடியாது எனவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments