Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கில்கிரிஸ்ட் பந்து போட சச்சின் அடிக்கிறாரா? – கிரேம் ஸ்வானின் புதிய கிரிக்கெட் டீம்

கில்கிரிஸ்ட் பந்து போட சச்சின் அடிக்கிறாரா? – கிரேம் ஸ்வானின் புதிய கிரிக்கெட் டீம்
, வெள்ளி, 14 ஜூன் 2019 (17:10 IST)
தற்போது உலகக்கோப்பை போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் Best World Cup Team என்ற பெயரில் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் இணைந்த ஒரு குழு பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள்.

இதில் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தனக்கு பிடித்தமான வீரர்கள் கொண்ட ஒரு குழு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரையும் சேர்த்துள்ளார். மேலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங், சிறந்த வேகபந்து வீச்சாளர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் பெயரையும் சேர்த்துள்ளார்.

இவற்றையெல்லாம் தாண்டி முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பிரதமரும் ஆன இம்ரான் கான் பெயரையும் அதில் சேர்த்துள்ளார். இந்த பிரம்மாண்டமான அணிக்கு தானே கேப்டனாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கற்பனையில் உருவான அணிதான் என்றாலும் அசைக்க முடியாத 90களின் ஜாம்பவான்களை வரிசைப்படுத்திவிட்டார் கிரேம் ஸ்வான். மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தான் ஒரு அணியை உருவாக்கினால் அதில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று பட்டியலிட்டு வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பாடா டாஸ் போட்டாச்சு… விட்டுக்கொடுத்த மழை … - தொடங்கியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டி !