Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை பலப்பரீட்சை – டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் !

Advertiesment
இங்கிலாந்து
உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பைத் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்று இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்று 4 ஆம் இடத்திலும் உள்ளன.

இதையடுத்து அந்த இரு அணிகளுக்கும் இடையிலானப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 5 போட்டியில் ஆஸியும் 2 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும் – ஷகிப் உல் ஹசன் சவால் !