Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ்ற்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ் !

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (21:35 IST)
3 வது ஐபிஎல் போட்டி இன்று துவங்கி வரும் நவம்பர் 10 ஆம் தேதி நடக்கிறது. இதில்சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இப்போட்டியைப் பார்க்க தயாராகினர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் சிங்கங்களும், மும்பை இந்தியன்ஸ் சிறுத்தைகளும்  இரவு 7:30 மணிக்கு மோதத் துவங்கினர். 

இதையடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பமே அசத்தலானதால் சென்னை கிங்ஸ் அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்களை  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிறகு 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்துள்ளது. மேலும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வயதாவர்கள் என்று கூறப்பட்ட நிலையில், டுபிஸில் பவுண்டரி எல்லையில் அடுத்தடுத்து இரண்டு அபாரமான கேட்ஸ்களை பிடித்தது வைரலாகி வருகிறது. பந்து வீச்சாளர்கள் நிகிடி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

இனி அடுத்து களமிறங்கும் சென்னை சூப்பர் அணி வானவேடிக்கை நிகழ்த்த காத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்