என் பயோபிக்கில் இவர் நடித்தால் சிறப்பாக இருக்கும்.. யுவ்ராஜ் சிங் ஆசை!

vinoth
வியாழன், 18 ஜனவரி 2024 (14:13 IST)
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் வரிசையாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் யுவ்ராஜ் சிங்கிடம் அவரிடம் உங்களுடைய பயோபிக் எடுத்தால் அதில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவ்ராஜ் சிங் “சமீபத்தில் அனிமல் திரைப்படத்தைப் பார்த்தேன். ரன்பீர் கபூர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் என்னுடைய பயோபிக்கில் நடித்தால் சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments