குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

vinoth
திங்கள், 3 பிப்ரவரி 2025 (15:00 IST)
நேற்று நடந்த இங்க்லாந்து அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250. சமீபகாலமாக முதல் பந்து முதலே பவுண்டர்களை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா.

இந்நிலையில் தொடருக்குப் பின்னர் பேசியுள்ள கம்பீர் “இனிமேல் அணியில் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களுக்கு அதிக ஆதரவு தரப்போகிறோம். 140 முதல் 150 கிமீ வரை வீசப்படும் பந்துகளுக்கு எதிராக இப்படி ஒரு சதத்தை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை.” எனக் கூறியுள்ளார்.

அதேபோல அபிஷேக் ஷர்மாவின் தனிப்பயிற்சியாளரான யுவ்ராஜ் சிங் அபிஷேக் ஷர்மா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அவரது சமூகவலைதளப் பக்கத்தில் “நன்றாக விளையாடினாய் அபிஷேக்.  உன்னை இப்படியொரு இடத்தில்தான் நான் பார்க்க ஆசைப்பட்டேன். பெருமையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments