Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் ஒரு பாடம்... கேப்டன் ரோகித் சர்மா!!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (10:34 IST)
நல்ல ஸ்கோர் எடுத்தும் பீல்டிங்கில் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என ரோகித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கிரிக்கெட் போட்டியின்  டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அதிர்ச்சி கொடுத்தது. 
 
போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த தவான் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதன்பின்னர் ரிஷப் பண்ட் 27 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும் எடுத்ததை அடுத்து இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் ரஹிம் அதிரடியாக விளையாடி 60 ரன்களும் சர்கார் 39 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து வங்கதேச அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ராஜ்கோட்டில் வரும் 7ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில் தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரோகித் தோல்வி குறித்து கூறியதாவது, 
நாங்கள் எடுத்தது போதுமான ஸ்கோர்தான். ஆனால், பீல்டிங்கில் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். தவறு எங்கள் பக்கம்தான். இதெல்லாம் பாடம். இதில் இருந்து கற்றுக்கொள்வோம். பங்களாதேஷ் அணி, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. டி20 போட்டிகளுக்கு சாஹல் முக்கியமான வீரர். அவரது முக்கியத்துசம் மிடில் ஓவர்களில் தெரிந்தது. அவர் நம்பிக்கையுடன் ஆடினார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments