Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

vinoth
வெள்ளி, 25 ஜூலை 2025 (15:25 IST)
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரான யாஷ் தயாள் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் ஈர்த்து இந்திய அணிக்குத் தேர்வானார். முதலில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தார். இந்நிலையில் அவர் மேல் ஒரு பெண் பாலியல் புகார் சுமத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்ததாகவும், கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்வதாகவும் கூறி தன்னைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று சம்மந்தப்பட்ட பெண் புகாரளிக்க, காவல்துறையினர் இப்போது யாஷ் மீது பிரிவு 69-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு எதிராக சம்மந்தப்பட்ட பெண் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக தயாள் தரப்பிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.  இந்நிலையில்  யாஷ் தயாள் அந்த பெண்ணிடம் பழகிய போது அவர் மைனர் என்பதால் தற்போது அவர் மேல் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை பெரியளவில் பாதிக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்