Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்யுத்த வீராங்கனைகள் தங்களுடைய போரை முன்னெடுக்க வேண்டும் -கங்குலி

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (19:39 IST)
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுடைய போரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவரும், பாஜக எம்பியுமாக இருப்பவர் பிரிஜ் பூஷன். இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த பல நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு டெல்லி போலீஸாருக்கும், போராட்டம் நடத்தி வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுதொடர்பாக  கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘’ மல்யுத்த வீராங்கனைகள் தங்களுடைய போரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை விளையாட்டு உலகில் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது பற்றி பேசக்கூடாது ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்?

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

அடுத்த கட்டுரையில்