உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி...மழையால் ரத்து !

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (19:53 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகும் என கூறப்பட்ட நிலையில் மழையால் 4 வது நாள் ஆட்டம்  ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட்கோலி 44 ரன்களும் ரஹானே 49 ரன்களும் எடுத்தனர் .

இங்கிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. டெவொன் கான்வெ 54 ரன்களும், டாம் லாத்தம் 30 ரன்களும் எடுத்துள்ளார்கள். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

 
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது. ஏற்கனவே முதல்நாள் மழையால் கைவிடப்பட்டு ரிஸர்வ்ட் நாளான 23 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் 4 வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments