Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

21 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனைப் படைத்த டொபாகோ வீரர்

21 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனைப் படைத்த டொபாகோ வீரர்
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (14:56 IST)
டொபாகோ நாட்டு வீரர் ஈராக் தாமஸ் என்பவர் 21 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
 

 
வெஸ்ட் இண்டீஸ் தீவுகளை சேர்ந்த நாடுகளில் ஒன்றான டொபாகோ கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் லூயிஸ் டி’ஆர் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஸ்கிராபோரோ/மேசன் ஹால் அணியும், ஸ்பேசைடு அணியும் மோதின.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்பேசைடு அணி 20 ஓவரில் 151/7 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஸ்கிராபோரோ/மேசன் ஹால் அணி 8 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
 
இதில், ருத்ர தாண்டவம் ஆடிய ஈராக் தாமஸ், 31 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் அவர் 21 பந்துகளில் [15 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்] 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் பட்டியலில் உலகளவில் ஈராக் தாமஸ் பிடித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்ததே சிறந்த சாதனையாக இருந்தது. அதேபோல, அதிரடி மன்னன் ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டி ஒன்றில் 31 பந்துகளில் சதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து கூறியுள்ள ஈராக் தாமஸ், ”எனது முதல் டி 20 சதத்தை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு விரைவாக ரன்கள் சேர்ப்பேன் என்று ஒரு போதும் நினைத்தது கிடையாது. எனது முதல் 'டுவென்டி-20' சதத்தை, குறைந்த பந்துகளில் எட்டியது மிகவும் மகிழ்வாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக குத்துச்சண்டை போட்டியில் 7 வயது சிறுமி: இந்தியா பெருமிதம்