Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி: ரோஹித் சர்மாவுக்கு புதிய போஸ்டர் ரிலீஸ்

Webdunia
புதன், 31 மே 2023 (14:03 IST)
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
 
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள  நிலையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்த இறுதிபோட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியான நிலையில்,  இந்த அணியின்  கேப்டனாக பேட் கம்மிங்ஸ்   நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான  15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதுவும் இந்திய அணி வெல்லாத நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில்,  வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை டெஸ்ட் போட்டியை  முன்னிட்டு இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு  புதிய போஸ்டர் ஒன்றை ஐசிசி அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments