Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் டி-20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

Advertiesment
Australia
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (23:02 IST)
மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்திய் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில், மகளிர் –டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

இன்று நடந்த குரூப்-1 லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை இலங்கை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. எனவே முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 112ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனவே, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 25 பந்துகள் இருந்தாலும், இலக்கை எளிதில் எட்டி 10 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் உலகக் கோப்பைப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20- கிரிக்கெட்: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய சாதனை...