ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி பேசியதற்கு பாகிஸ்தான் நாட்டில் பலரும் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இந்திய கிரிகெட் ரசிகர்கள் விராட் கோலி புகைப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இந்திய அணியை கடுமையான விமர்சித்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் ரசிகர்களிடம் இருந்து தப்பி கொண்டார்.
போட்டி நிரைவடைந்த பின் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் ஆணி வீரர்கள் நன்றாக விளையாடினர். எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நினைத்து சந்தோஷமாக உள்ளது என்று கூறினார்.
இதற்கு பாகிஸ்தான் நாட்டு ஊடக துறையில் உள்ளவர்கள் மற்றும் பலர் ட்விட்டரில் கோலிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் நியூசிலாந்து அணி வீரர் மெக்குலம் கோலியின் இத்தகைய பெருமித வார்த்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பிரிவினை தூண்டும் எண்ணமும் மத வெறியும் உள்ளவர்கள் தான் பாகிஸ்தான் அணியை வெறுத்தும், இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர். இயல்பாக உள்ள இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கின்றனர்.