அந்த வீரரை உள்ளேக் கொண்டுவருவது சம்மந்தமாக ரோஹித்துக்கும் கம்பீருக்கும் இடையே விவாதம்!

Webdunia
ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:46 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இந்நிலையில் இந்த போட்டியில் தசைப் பிடிப்புக் காரணமாக ரோஹித் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இதுவரை பயன்படுத்தப் படாத வருண் சக்ரவர்த்தியை இந்த போட்டியில் பயன்படுத்தலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

குல்தீப் யாதவ்வை விட வருண் சக்ரவர்த்தியால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற நோக்கில் இது சம்மந்தமாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் இடையே ஓய்வறையில் விவாதம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இன்றைய போட்டியின் ஆடும் லெவன் அணி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதமடித்தார் ஜான் கேம்ப்பெல்.. 2வது இன்னிங்ஸில் மாஸ் காட்டும் மே.இ.தீவுகள்..!

ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுகிறாரா கோலி… திடீரென பரவும் தகவல்!

2வது இன்னிங்ஸில் சுதாரித்த மே.இ.தீவுகள்.. சதத்தை நெருங்கிய கேம்ப்பெல்.. ஹோப் அதிரடி ஆட்டம்..!

ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள்.. 2வது இன்னிங்ஸிலும் விக்கெட் இழப்பு.. தொடர்கிறது குல்தீப் வேட்டை..!

குல்தீப் யாதவ், ஜடேஜா அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்தது மே.இ.தீவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments