Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறுமா?

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (20:37 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளிடம் தோல்வி அடைந்த காரணத்தால் பாகிஸ்தான் அணியால் 2 ஆம் இடம் பிடிக்கமுடியவில்லை. இதனால், அந்த அணி வீரர்கள் வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது டி-20 கிரிக்கெட் உலக்கோப்பை  தொடர் நடந்து வருகிறது. இத்தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகள் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், நாளை கடைசி லீக் ஆட்டம் நடைபெற உள்ளதால், பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பில்லை என்றே தகவல் வெளியாகிறது.

தற்போது, புள்ளிப்பட்டியலில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலுள்ளது.

நாளைய போட்டியில், தென் ஆப்பிரிக்கா-  நெதர்லாந்தையும், இந்தியா- ஜிம்பாவேயையும், பாகிஸ்தான் வங்கதேசத்தை  எதிர்கொள்கிறது. இதில்,தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றால்,  இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்குத் தகுதி பெரும்.

இந்தியா தோற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments