இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு – ரசிகர்கள் குழப்பம்!

வியாழன், 28 மே 2020 (10:50 IST)
இந்திய அணி டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடக்க இருந்த தொடரின் அட்டவணை வெளியிட்டுள்ளன சில ஆஸ்திரேலிய ஊடகங்கள்.

கொரோனா காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைக்குப் பின்னர் நடக்க இருந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தற்பொதைய நிலையில் எதுவும் உறுதி இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அது குறித்து பேசியுள்ளார்.

தனது பேட்டியில் ‘இப்போதைய உலகில் எதையும் உறுதியாக சொல்லமுடியாது. இந்திய கிரிக்கெட் அணி எங்கள் நாட்டுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடரில் நடக்க இருக்கும் போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளன.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்
2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)
3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்
4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

தொடரே நடக்குமா நடக்காதா என்று தெரியாத நிலையில் அட்டவணை வெளியானது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரியாலிட்டி ஷோவால் தற்கொலை செய்து கொண்ட வீராங்கனை