Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவாரா? பிசிசிஐ அதிகாரி வெளியிட்ட தகவல்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:28 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வருகிறார்.

இந்திய அணிக்காக கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைதததில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தற்போது டி 20 அணியில் அவர் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது இந்திய டி 20 அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவதில்லை.

இந்நிலையில் டி 20 உலகக்கோப்பை தொடர் விரைவில் வர உள்ள நிலையில் அதில் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்ற தினேஷ் கார்த்திக் இப்போது தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இது சம்மந்தமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் “இனி அவரின் இடத்தை யாரால் நிராகரிக்க முடியும். அவர் டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதி.” எனக் கூறியுள்ளார். இது தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments