தோனியை சி எஸ் கே அணி தக்கவைக்குமா?... ஏலத்தில் விடுமா? – புதிய குழப்பம்!

vinoth
செவ்வாய், 4 ஜூன் 2024 (07:40 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக்  போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது.

உடனடியாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இங்கிலாந்துக்கு அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சி எஸ் கே அணி நிர்வாகிகள் அவர் விளையாடுவார் என்றே உறுதியாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். ஏலத்தில் விடப்படும் வீரர்களில் ஒருவரை வேறு அணி எடுத்தால் அதை ரைட் டூ மேட்ச் என்ற முறையில் அவர்கள் எடுத்த தொகைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி ஒரு நிலையில் தோனியை சிஎஸ் கே அணி தக்கவைக்குமா அல்லது ஏலத்தில் விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை தக்கவைத்தால் தோனி அடுத்த மூன்று சீசன்களுக்கு விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments