Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் கிங்ஸ்க்கு பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று தரம்சாலாவில் மோதல்!

Prasanth Karthick
ஞாயிறு, 5 மே 2024 (09:16 IST)
ஐபிஎல் சீசனின் பரபரப்பான லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன.



இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வென்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளையாவது வெல்ல வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு உள்ளது.

அதேபோல பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளையுமே வென்றால் மட்டுமே பஞ்சாப் ப்ளே ஆப் தகுதி பெற வாய்ப்பாவது கிடைக்கும். இதனால் இன்று இந்த இரு அணிகளும் மோதும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1ம் தேதி நடந்த லீக் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அந்த வெற்றிக்கு இன்று சென்னை அணி பதிலடி கொடுக்குமா என சென்னை அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இன்றைய சென்னை அணியின் பவுலிங்கில் மாற்றங்கள் இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மான் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் புதிதாக வந்த ரிச்சர்ட் க்ளீசன் சிறப்பாக விளையாடி வருவதால் மாற்றங்கள் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments