Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபி அணிக்கு ஆறுதல் வெற்றி.. ஒரே வெற்றியால் 10ல் இருந்து 7வது இடம்..!

Siva
ஞாயிறு, 5 மே 2024 (08:40 IST)
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆர்சிபி அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இனி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பதும் குறிப்பாக 20 வது ஓவரில்  முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 148 என்ற எளிய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான டூபிளஸ்சிஸ் மற்றும் விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 100 ரன்களுக்கும் மேல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்

இறுதியில் 13.4 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் அந்த அணி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3 போட்டிகளில் ஆர்சிபி அணி வென்றுவிட்டால் அந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments