கடைசி ஓவரை ஏன் அவரிடம் கொடுத்தேன்… ஹர்திக் பாண்ட்யா பதில்!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (15:07 IST)
நேற்றைய பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி அக்ஸர் படேல் வெற்றியை இந்திய அணிக்குப் பெற்றுத் தந்தார்.

நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியைக் கரைசேர்த்தனர்.

இதையடுத்து ஆடிய இலங்கை அணி இலக்கை துரத்திய நிலையில் கடைசி ஓவர் வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை தான் வீசாமல், அக்ஸர் படேலுக்கு கொடுத்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்த அக்ஸர் படேல் சிறப்பாக பந்துவீசினார். இதுபற்றி பேசிய ஹர்திக் படேல் “கடைசி ஓவரை நான் வீசாமல் அக்ஸர் படேலுக்குக் கொடுத்த காரணம், எனது வீரர்கள் இக்கட்டான நிலைமையை எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தேன். இதுபோன்ற சூழல்களால்தான நிறைய பாடங்கள் கிடைக்கும். நேற்றைய போட்டியில் அனைத்து இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடினர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments