Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதி போட்டியில் மோத போகும் அணிகள் எவை? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

Advertiesment
Cricket News
, வியாழன், 4 ஜூலை 2019 (13:02 IST)
லண்டனில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகள் ஏறத்தாழ அறையிறுதியை நெருங்கிவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மூன்று அணிகளும் அரையிறுதிக்கு கிட்டதட்ட தகுதியடைந்துவிட்டன. நான்காவது அணிக்கு மட்டும் இன்னும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் செல்ல வேண்டும் என ரசிகர்கள் சிலர் சில எதிர்ர்பார்ப்பில் உள்ளனர்.
நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து வென்றதால் நியூஸிலாந்து நான்காவது இடத்தில் உள்ளது. அந்த நான்காவது இடத்தை பிடிக்க வேண்டுமானால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஒருவேளை சாதரண வெற்றிபெற்றாலும் ரன் ரேட்டில் நியூஸிலாந்து நல்ல நிலையில் இருப்பதால் நியூஸிலாந்தே அரையிறுதிக்கு தகுதிபெறும்.
 
அப்படி தகுதி பெற்றால் அரையிறுதி நியூஸிலாந்து அணிக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் ஆட்டத்தில் நியூஸிலாந்தோடு இந்தியா ஆட வேண்டிய போட்டியின்போது மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்தோடு விளையாடினால் அனைத்து அணியினரோடும் இந்தியா விளையாடி இருக்கும். 
 
ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும். இந்தியா-நியூஸிலாந்து ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டும். இறுதி போட்டி ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இடையே நடைபெற வேண்டும். அதில் ஆஸ்திரேலியாவை மண்டியிட செய்து இந்தியா வெற்றிபெற வேண்டும் என்பதுதான்.
 
ஏனென்றால் 2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இதே இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் உலக கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா 50 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 359 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இந்தியா 39 ஓவர்களுக்கெல்லாம் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களில் தோல்வியை தழுவியது. 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
 
ரிக்கி பாண்டிங் 140 ரன்கள் எடுத்து அன்றைய ஆட்ட நாயகன் ஆனார். சச்சின் டெண்டுல்கர் அன்றைய ஆட்டத்தில் 4 ரன்களில் அவுட் ஆனார். இந்த படுதோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத 90ஸ் கிட்ஸ் “ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங்க் பேட் வைத்து விளையாடினார்” என குமுற தொடங்கினர். இந்த வருட ஆட்டத்தில் அந்த தோல்விக்கு திருப்பி அடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கனவு. கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துக்கடா ப்ளேயர் என விமர்சித்த வர்ணனையாளர்: விட்டு விளாசிய ஜடேஜா!