Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்பராஸ் கான் vs ரஜத் படிதார்… விசாகப்பட்டிணம் டெஸ்ட்டில் யார் உள்ளே? – பேட்டிங் கோச் தந்த பதில்!

vinoth
வியாழன், 1 பிப்ரவரி 2024 (11:45 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுகு பதில் சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.

ஏற்கனவே பிளேயிங் லெவனில் ரஜத் படிதார் உள்ள நிலையில் இப்போது சர்பராஸ் கான் இணைந்துள்ள நிலையில் இவர்களில் யார் ப்ளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்துக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பதிலளித்துள்ளார்.

அதில் “இருவருமே மிகச்சிறந்த அனுபவத்தோடு இந்திய அணிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே ப்ளேயிங் லெவனில் இடம்பெற முடியும். அது யார் என்பது குறித்து சொல்ல முடியாது. அதுபற்றி கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும்தான் முடிவெடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments