Publish Date: Thu, 01 Feb 2024 (07:06 IST)
Updated Date: Thu, 01 Feb 2024 (07:11 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுகு பதில் சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.
முதல் தரக் கிரிக்கெட்டில் 69 ரன்கள் சராசரி வைத்துள்ள சர்பராஸ் கான், கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள ஒரு போட்டியில் மட்டும்தான் சர்பார்ஸ் கானுக்கு வழங்கப்படும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அதில் “மூன்றாவது டெஸ்ட்டுக்கு கோலி வந்துவிட்டால், சர்பராஸ் கானை நீக்கிவிடுவார்கள். அதனால் இந்த போட்டியில் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டதற்கு பயன் இல்லாமல் போய்விடும்” எனக் கூறியுள்ளார்.
vinoth
Publish Date: Thu, 01 Feb 2024 (07:06 IST)
Updated Date: Thu, 01 Feb 2024 (07:11 IST)