இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பும்ராவை அணியில் சேர்க்காதது குறித்து டெல் ஸ்டெய்ன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று முதலாக இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் என்ற நிலையில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முழுவதுமாக பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து 8 பேட்ஸ்மேன்களை இந்திய அணி களமிறக்கியுள்ளது. முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முதுகெலும்பாக விளங்கிய ஜாஸ்ப்ரிட் பும்ரா அணியில் இருந்தும் ப்ளேயிங் 11ல் எடுக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரவி சாஸ்திரி தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டெல் ஸ்டெயினும் இந்த முடிவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோதான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் வைக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம், அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துக் கொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்துள்ளது. இது எனக்கு புரியல” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K