Publish Date: Wed, 06 Jun 2018 (19:24 IST)
Updated Date: Wed, 06 Jun 2018 (19:29 IST)
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய உள்ளது. அதன்படி இலங்கை அணி பவுலிங் செய்ய உள்ளது.
இதுவரை வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் இந்த தொடர் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக கருதப்படுகிறது.