Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய நம்பிக்கையோட வந்தோம்.. ஆனா மொத்தமா சொதப்பிட்டோம்! ஜாஸ் பட்லர் வேதனை!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (13:35 IST)
உலக கோப்பையில் மோசமாக தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் வேதனை தெரிவித்துள்ளார்.



ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தோல்வி முகமே காணாமல் தொடர் வெற்றியில் முதலிடத்தில் உள்ள நிலையில் பல்வேறு அணிகளும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டமாக நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இந்த போட்டிகளில் மோசமான நிலையை அடைந்துள்ளது.

சிறிய கிரிக்கெட் அணியான நெதர்லாந்து கூட ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாக தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து அணி.

இது குறித்து பெரும் வேதனையுடன் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஷ் பட்லர் “இந்த தொடர் தோல்வி எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிகப்பெரும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு லண்டன் நாங்கள் இந்தியாவிற்கு வந்தோம். ஆனால் அதற்கான நியாயத்தை எங்கள் அணி சரியாக செய்யவில்லை. நான் சிறப்பாக ஆடாததால் அணியும் பின் தங்கிவிட்டது. சிறப்பான பயிற்சிகளின்மூலம் அடுத்த போட்டியில் நன்றாக விளையாட முயற்சிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

அடுத்த கட்டுரையில்
Show comments