Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1330 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் விக்கெட்… அசத்திய வாஷிங்டன் சுந்தர்!

1330 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் விக்கெட்… அசத்திய வாஷிங்டன் சுந்தர்!

vinoth

, வியாழன், 24 அக்டோபர் 2024 (16:06 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தன,

இந்த போட்டியில் 59 ரன்களை மட்டும் கொடுத்து வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அனைத்து விக்கெட்களையும் அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகிய இருவரே கைப்பற்றினர்.

கிட்டத்தட்ட 1330 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சுந்தர் தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே 7 விக்கெட்களை வீழத்தி அசத்தியுள்ளார். கடைசியாக அவர் 2021 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இருந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாதனை செய்த அஸ்வின்.. 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து..!