இதெல்லாம் என்ன வியூகம்… கம்பீர் & சூர்யகுமாரை விளாசும் ரசிகர்கள்!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (07:18 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி  26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் பெக்கட் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 51 மற்றும் 43 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி மிகச்சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கோடு இந்திய அணி ஆடிய நிலையில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல இந்திய அணியின் பேட்டிங் வியூகமும் மோசமாக இருந்தது. பவுலரான வாஷிங்டன் சுந்தரை ஆறாவது பேட்ஸ்மேனாக அனுப்பினர். அவர் 15 பந்துகள் சந்தித்து 6 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டானார். அதனால் இந்திய அணியின் தேவைப்படும் ரன்விகிதம் மளமளவென உயர்ந்தது. ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் எட்டாவது பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டார். ஏன் இப்படி ஒரு மோசமான வியூகம் என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments