Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியே இல்லாமல் இந்தியாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்… விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:26 IST)
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்துள்ளன. இதில் தோல்வியே இல்லாமல் இந்திய அணி விளையாடிய அனைத்து 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த அதிரடி போக்கு குறித்து பேசியுள்ள முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் வீவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணி தோல்வியே இல்லாமல் உலகக் கோப்பையை வெல்ல முடியும். நான் மட்டும் ஓய்வறையில் இந்திய அணியோடு இருந்தால் “யோசிக்காமல் இதுபோல அதிரடியாக விளையாடுங்கள் என்று கூறுவேன்.

எப்போதுமே வீரர்களுக்கு ஒரு பயம் வரும். தொடர்ந்து நாம் சிறப்பாக விளையாடி அனைத்து போட்டிகளையும் வெற்றி பெறுகிறோம். அதனால் மோசமான ஒரு போட்டி வரும் என்று. அதை ஒழித்துவிட்டு நேர்மறை எண்ணத்தோடு விளையாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments