Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (17:51 IST)
ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகின் அதிக பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் உள்ளது. ஒரு ஆண்டு முழுவதும் விளையாடினால் வீரர்கள் தேசிய அணியின் மூலம் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அதை விட அதிகமாக இரண்டே மாதத்தில் சம்பாதித்துவிடுகின்றனர்.

இதனால் ஐபிஎல் நடக்கும் இரண்டு மாதங்களில் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர் எதையும் திட்டமிடுவதில்லை. உலகெங்கிலும் உள்ள வீரர்கள் வந்து ஐபிஎல் தொடரில் விளையாடி புகழ்பெறுகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் வேறு எந்த நாட்டு லீக் தொடரிலும் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் கடமைக்குதான் விளையாடுகிறார்கள் என்றக் குற்றச்சாட்டை வீரேந்திர சேவாக் வைத்துள்ளார். அதில் “நான் பார்த்தவரையில் மெக்ராத் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகிய சில வீரர்கள் மட்டும்தான் உணர்வு பூர்வமாக விளையாடினார்கள். மற்ற வீரர்கள் விடுமுறைக் கொண்டாட்டம் போலதான் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டார்கள். ப்ளே ஆஃப் போட்டியில் நாம் தோற்றால் இதை உணரலாம். போட்டியில் தோற்றால் நாம் மூட்டைக் கட்டிக்கொண்டு போவோம். ஆனால் அவர்கள் ‘எப்போது பார்ட்டி?’ என்று கேட்பார்கள். அது இந்திய வீரர்களுக்கு காயத்தைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments