Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

Advertiesment
உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

vinoth

, வியாழன், 13 பிப்ரவரி 2025 (12:34 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுக் கேப்டனுக்கு ஆதரவாக விராட் கோலி பேசியுள்ளார். அதில் “நானும் மற்ற அணி வீரர்களும் உன் பின்னால் உனக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆர் சி பி அணியில் உங்கள் திறமையின் மூலம் நீங்கள் அடைந்த வளர்ச்சி, உங்களை ஆர் சி பி அணியின் ரசிகர்கள் இதயத்தில் இடம்பெற வைத்துள்ளது. நீங்கள் இந்த கேப்டன் பதவிக்குத் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? விராத் கோலி ரசிகர்கள் அதிருப்தி..!