Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்கு வெற்றிப் பெற்று கொடுப்பதே முக்கியம்… அதனால்தான் 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன் – விமர்சனங்களுக்கு கோலி பதில்!

vinoth
திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:07 IST)
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்களும், ஷாரூக்கான் 30 பந்துகளில் 58 ரன்களும் அடித்தனர்.

அதன் பின்னர் ஆடிய ஆர் சி பி அணியில் அந்த அணியின் வில் ஜாக்ஸ் அபாரமாக ஆடி 41 பந்துகளில் சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்ததும் பேசிய கோலி “வில் ஜாக்ஸின் சதம் ஈடு இணையில்லாதது. நான் பார்த்த மிகச்சிறந்த டி 20 இன்னிங்ஸ்களில் ஒன்று. மோகித் சர்மா ஓவரில் ஜாக்ஸ் சிக்சர் அடித்த பின், எனது பங்களிப்பு மாறிவிட்டது. எதிர்முனையில் அவர் சிக்ஸர்கள் அடிப்பதை பார்த்து ரசித்தேன்.

பலரும் எனது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிராக எனது பேட்டிங் குறித்து பேசி வருகிறார்கள். எனக்கு அணியை வெற்றி பெற வைப்பதே முக்கியம். அதனால்தான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அணியில் நான் இருக்கிறேன்.நாங்கள் இப்போது சுயமரியாதைக்காவும் ரசிகர்களுக்காவும் விளையாடுகிறோம். முதல் பாதியில் விளையாடியது போல இனிமேல் விளையாடமாட்டோம்.இதை தொடர விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments